கிறிஸ்துவ மதத்திற்கு கட்டாய மதமாற்ற முயற்சி – அலட்சியமாக செயல்பட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பணி நீக்கம்.

0
444

மத்திய பிரதேசத்தில், பர்வாலியாவில் ஆன்சல் என்ற குழந்தைகள் காப்பகம் சட்ட விரோதமாக இயங்கி வந்துள்ளது அங்கு வசிக்கும் சிறுமியர் கிறிஸ்துவ மதத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக பொது மக்களால் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 4ம் தேதி, இக்காப்பகத்தில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனின் தலைவர் பிரியங்க் கனுங்கோ திடீர் ஆய்வு நடத்தினார். அப்பொழுது அங்குள்ள பதிவேட்டை சரிபார்த்தபோது, மொத்தம் உள்ள 68 சிறுமியரில் 26 பேர் காணாமல் போனது தெரியவந்தது. விடுதி இயக்குனர் அனில் மேத்யூவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளான் . உண்மை நிலையறிந்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் சார்பில் உள்ளூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன சிறுமியரை, தேடும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டனர். ஆதம்பூர் சாவ்னி பகுதியில் 10 சிறுமியரும், அங்குள்ள குடிசைப் பகுதியில் 13 சிறுமியரும், டாப் நகரில் இரண்டு சிறுமியரும், ரெய்சன் பகுதியில் ஒரு சிறுமி என மொத்தம் 26 பேரையும் போலீசார் பத்திரமாக மீட்டு, அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையே அலட்சியமாக செயல்பட்ட மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்களான பிரேஜேந்திர பிரதாப் சிங் மற்றும் கோமால் உபாத்யாய் ஆகிய இருவரை, மாவட்ட நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here