ப்ராண ப்ரதிஷ்டை 11 சாஸ்திர வல்லுனர்கள் செய்வார்கள் அயோத்தியா 10 ஜனவரி
ராம்லலாவின் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் இருந்து ஜனவரி 16 ஆம் தேதி முதல் பூஜைகள் ஆரம்பமாக உள்ளன. இதன் பிறகு சிலையை வடித்த சிற்பியின் பரிகார பூஜைகள் பூஜைகள் நடைபெறும்.
விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தேசிய செய்தி தொடர்பாளரும் துறவிகள் சம்பர்க் பிரமுக்குமான திரு அசோக் திவாரி அவர்கள் கூறுகையில் 17-ஆம் தேதி அன்று சிலைகள் வளாகத்தில் உள்ள ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அன்று கர்ப்ப கிரகத்தின் சுத்த கலசபூஜை நடைபெறும். 18 ஜனவரி அன்று அபிஷேகங்கள் ஆரம்பமாகும். ஜலம் மற்றும் சுகந்த திரவியங்களினால் அபிஷேகம் நடைபெறும் 19 ஜனவரி அன்று காலை பழங்களினால் அபிஷேகமும் மாலையில் தானியங்களால் அபிஷேகம் நடைபெறும். இது போன்று இருபதாம் தேதி காலையில் மலர்களாலும் ரத்தினங்களாலும் அபிஷேகம் நடைபெறும் மாலையில் நிலை அனுஷ்டானங்களும் என்றார்.
திரு திவாரி அவர்கள் மேலும் கூறுகையில் 20 ஜனவரி காலையில் சர்க்கரை ,தேன் மற்றும் இனிப்பு பொருட்களினால் ஆன அபிஷேகமும் மாலையில் மருந்துகளினால் ஆன அபிஷேகமும் நடைபெறும். பகவான் ஸ்ரீ ராமச்சந்திரஜி சூரிய குலத்தை சார்ந்தவர் ஆகவே துவாதிசி அபிஷேகங்களும் நடைபெறும்.
இது தவிர ஜனவரி 16 முதல் 22 வரை 4 வேத பாராயணங்கள் நடைபெறும். பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சியை பிரம்மா கணேஸ்வர் சாஸ்திரி திரவிட், பிரமுக ஆச்சாரியார் லட்சுமி காந்த தீக்ஷித், சுனில் தீக்ஷித், கஜானந்த ஜோகர்,கடாடேகுருஜி போன்ற 11 சாஸ்திர வல்லுனர்கள் பிராணப்ரதிஷ்ட்டா அனுஷ்டானத்தை செய்வார்கள். ஜனவரி 22 மதியம் ஸ்ரீராம விக்கிரகத்தின் கண்கள் திறக்கப்பட்டு கண்ணாடி காண்பிக்கப்படும்.
தொடர்பாளர்– ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்திர புராணப் பிரதிஷ்ட நிகழ்ச்சி தொகுப்பு மையம்… அயோத்தியா தாம்