கோலாலம்பூரில் மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று நடைபெற்றது.இதைத் தொடர்ந்து நேற்று இரட்டையர் பிரிவு முதல் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பாக சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி – சிராக் ஷெட்டி ஜோடி விளையாடியது.இவர்களுடன் இந்தோனேசியாவின் முகமத் ஷோஹிபுல் பிக்ரி – பகாஸ் மலானா ஜோடி மோதியது. இந்த போட்டியில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 21-18, 21-19 என்ற செட் கணக்கில் முகமத் ஷோஹிபுல் பிக்ரி – பகாஸ் மலானா ஜோடியை வீழ்த்தி 2வது சுற்றுக்குள் முன்னேறியது.