இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கர அமைப்புக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஈரான் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஏமனில் உள்ள ஹவுதி பயங்கரவாதிகள் ஈரானின் ஆதரவு பெற்று, செங்கடல் பகுதியில், இஸ்ரேலுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதில் அமெரிக்கா உட்பட பல நாடுகளின் கப்பல்கள் சேதமடைந்தன. இந்த சூழ்நிலையில், இந்தியா – ஈரான் இடையேயான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது . காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை நிறுத்தி, மனிதநேய அடிப்படையில் பாலஸ்தீனியர்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும். அந்தப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலவ வேண்டும். இந்த விஷயத்தில் தலையிட்டு, தகுந்த தீர்வு காண்பதில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும். என ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி வலியுறுத்தினார்.