உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை – ஆந்திராவில் இன்று  திறப்பு

0
162

அமராவதி, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 125 அடி உயரம் கொண்டது. இது 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது. இந்த சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது. அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலையை ஆந்திர மாநில முதல்-மந்திரி இன்று திறந்து வைக்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here