ராணுவத்தைத் திரும்பப்பெறுவது குறித்து இந்தியா – மாலத்தீவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

0
253

அணிசேரா இயக்கத்தின் இரண்டு நாள் மாநாடு உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடக்கிறது. இதில் பங்கேற்க, இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார். மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மோசா ஜமீர் பங்கேற்கிறார். மாநாட்டிற்கு இடையே இரு அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இது தொடர்பாக ஜெய்சங்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இரு நாட்டு உறவுகள் குறித்து வெளிப்படையாக ஆலோசனை நடத்தினோம். அணி சேரா இயக்கம் குறித்தும் விவாதித்தோம் என தெரிவித்துள்ளார். மோசா ஜமீர் வெளியிட்ட அறிக்கையில், இந்திய ராணுவ வீரர்களை திரும்ப பெற்றுக் கொள்வது தொடர்பாக நடக்கும் உயர்மட்ட குழு ஆலோசனை குறித்து ஜெய்சங்கரிடம் விவாதித்தேன். மாலத்தீவில் நடக்கும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சார்க், அணிசேரா இயக்கம் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here