அரபிக்கடல் பகுதியில் உள்ள இந்திய விமான தகவல் மண்டலங்களில், கடந்த 23ம் தேதி, ‘டெசர்ட் நைட்’ என்ற பெயரில், இந்தியா – பிரான்ஸ் – யு.ஏ.இ., ஆகிய நாடுகளின் விமானப்படை கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன. இதில், நம் விமானப்படையின், ‘சுகோய் சு – 30, மிக் – 29, சி – 130 ஜே’ உள்ளிட்ட விமானங்கள் பங்கேற்றன. பிரான்ஸ் சார்பில் ரபேல் போர் விமானம், யு.ஏ.இ.,யின், ‘எப் – 16’ விமானங்களும் இந்த கூட்டு பயிற்சியில் ஈடுபட்டன. ராணுவ நடவடிக்கை அப்போது, தகவல் தொடர்பு, அனுபவங்கள், செயல்பாட்டு திறன் உள்ளிட்டவற்றை மூன்று நாடுகளின் வீரர்கள் பகிர்ந்து கொண்டனர்.இந்த பயிற்சி, பிராந்தியத்தில் ராணுவ நடவடிக்கைகள், துாதரக உறவுகள் மேம்பட்டு வருவதை வெளிப்படுத்துகிறது.
Home Breaking News செங்கடல் பகுதியில் இந்தியா – பிரான்ஸ் – யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய...