குடியரசு தின விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ‛‛ 2030ம் ஆண்டிற்குள் பிரான்சில் 30 ஆயிரம் இந்திய மாணவர்கள் இருப்பார்கள். இதுவே எனது உயர்ந்த இலக்கு. இதனை நிகழ்த்துவதில் உறுதியாக இருக்கிறேன்” எனக்கூறியுள்ளார். மேலும், இந்திய மாணவர்களுக்கு பிரான்ஸ் எப்படி உதவும் என விளக்கிய மேக்ரான், ‛‛ பிரெஞ்சு மொழி தெரியாத மாணவர்களை அங்குள்ள பல்கலைகளில் படிக்க அனுமதிக்கும் வகையில், சர்வதேச வகுப்புகள் நடத்தப்படும். மாணவர்கள், பிரெஞ்ச் மொழியைக் கற்க புதிய மையங்களுடன் ‛அலையன்ஸ் பிரான்சைஸ் நெட்வொர்க்கை’ உருவாக்கி வருகிறோம். சர்வதேச அளவில் வகுப்புகளை உருவாக்குகிறோம். இது பிரெஞ்சு மொழி கற்க விரும்பும் மாணவர்களை எங்கள் பல்கலைக்கழகங்களில் சேர அனுமதிக்கும். இந்தியாவும், பிரான்சும் எதிர்காலத்தில் இணைந்து செய்ய வேண்டியது அதிகம். இவ்வாறு சமுகவளைதலத்தில் கூறியுள்ளார்.