ஜெய்சால்மருக்கு அருகிலுள்ள பொக்ரான் ஏர் டு கிரவுண்ட் ரேஞ்சில் வாயு சக்தி – 2024 பயிற்சி

0
155

2024 பிப்ரவரி 17 அன்று ஜெய்சால்மருக்கு அருகிலுள்ள பொக்ரான் ஏர் டு கிரவுண்ட் ரேஞ்சில் வாயு சக்தி-24 பயிற்சியை இந்திய விமானப்படை நடத்த உள்ளது. ஏற்கனவே 2019 பிப்ரவரி 16-ம் தேதி இத்தகைய பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் இந்திய ராணுவத்துடனான கூட்டு நடவடிக்கைகளும் காட்சிப்படுத்தப்படும்.
இந்த ஆண்டு, இந்தப் பயிற்சியில் உள்நாட்டு தேஜஸ், பிரசாந்த், த்ருவ் உட்பட 121 விமானங்கள் பங்கேற்கும். ரஃபேல், மிராஜ்-2000, சுகோய்-30 எம்கேஐ, ஜாகுவார், ஹாக், சி-130ஜே, சினூக், அப்பாச்சி, எம்ஐ-17 ஆகிய விமானங்களும் பங்கேற்கின்றன. ஆகாஷ், சமர் ஆகியவை ஊடுருவும் விமானத்தைக் கண்டுபிடித்து சுட்டு வீழ்த்தும் திறனை நிரூபிக்கும். துல்லியமாகவும், சரியான நேரத்திலும், பேரழிவு விளைவுடனும் செயல்படும் இந்திய விமானப்படையின் திறனை இந்தப் பயிற்சி எடுத்துக்காட்டுவதாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here