திருவனந்தபுரத்தில் இருந்து அயோத்திக்கு செல்லும் முதல் ‘ஆஸ்தா சிறப்பு ரயில்’

0
5042

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கினர். திருவனந்தபுரத்தில் இருந்து அயோத்திக்கு செல்லும் முதல் ‘ஆஸ்தா சிறப்பு ரயில்’ இன்று கேரளாவின் கொச்சுவேலி ரயில் நிலையத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.அதன்படி இன்று முதல் கேரளா பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு ஆஸ்தா சிறப்பு ரயில் மூலம் பயணம் செய்ய தொடங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here