பாரத கப்பற் படை (முன்னாள்) வீரர்கள் 8 பேர் இஸ்ரேலுக்கு ஆதவாக உ்ளவுச் செயல்களில் ஈடுபட்டதாகக் கத்தார் அரசினால் குற்றம் சுமத்தி கைது செய்யப் பட்டு அனைவருக்கும் மரண தண்டனை வழங்கி அந்நாட்டுச் சிறையில் அடைக்கப் பட்டனர்.பாரத அரசு மேற்கொண்ட நடவடிக்கை களால் மரண தண்டனை சிறை தண்டனை யாகக் குறைக்கப்பட்டது.தொடர்ந்து இரு நாட்டு அரசுகளும் நடத்திய பேச்சு வார்த்தைகளினால் தற்போது பாரத கப்பற்படை (முன்னாள்) வீரர்கள் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பாரத அரசிற்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும் இது. கைது செய்யப்பட்டிருந்த 8 பேரில் 7 பேர் பாரதம் திரும்பிவிட்டனர்.கத்தார் நாட்டு அமீரின் இச்செயலை பாரத அரசு வரவேற்று பாராட்டுவதாக வெளி உறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள் ளது.8 பாரத கப்பற் படை முன்னாள் வீரர்கள் விடுதலை செய்யப்பட்டதன் பின்னணியில் நிகழ்ந்தவைகள்:
அக்டோபர் 26: மரண தண்டனை அறிவிப்பு:
நவம்பர் 20: கத்தார் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
நவம்பர் 23: விசாரணை நடைபெற்றது:
டிசம்பர் 1: பிரதமர் மோதி கத்தார் அமீர் துபாயில் சந்திப்பு.
டிசம்பர் 3: கத்தார் நாட்டிற்கான பாரத தூதரக அதிகாரி சிறையில் இருந்தவர் களுடன் சந்திப்பு.
டிசம்பர்7: விசாரணை தொடர்ந்தது
டிசம்பர் 28: நீதி மன்றத்தால் மரண தண்டனை ரத்து என அறிவிப்பு:
பிப்ருவரி 12: 8 பேரும் விடுதலை.