உத்தராகண்ட் மாநிலம் ஹல்த்வானியில் பன்புல்புரா பகுதியில் அரசு நிலத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாகக் கட்டப்பட்டிருந்த மதரஸா & மசூதி நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அகற்றப்பட்டது.. அதே இடத்தில் புதிய காவல் நிலையம் அமைக்க கட்டிடம் கட்டப்படுமென மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். பன்புல்புரா பாகிசா பகுதியில் சட்ட விரோத மாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த பல ஏக்கர் அரசு நிலங்கள் இந்நடவடிக்கையினால் மீட்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.அதனால் அப்பகுதியில் பெரும் வன் செயல்கள், தீ வைப்புகள், காவல் துறையினர் மீது பெட்ரோல் குண்டுகள் & கற்களைக் கொண்டு தாக்குதல்கள் நடைபெற்றன.
100 க்கும் அதிகமான வாகனகள் தீயில்கருகின &காவல் துறையினர் காயமடைந்துள்ளனர். வன்செயல்களைக் கட்டுக்குள் கொண்டுவர போலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் பலியாகினர். வன்செயலைத் தூண்டிவிட்ட முக்கிய குற்றவாளி உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து குற்றவாளிகளைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. முக்கிய குற்றவாளிகள் மீது UAPA சட்டத் தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.