பெண்களுக்கு ஒரு உதாரணம் என்றே சொல்லலாம். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் பிறந்து,ஏலகிரி மலையில் கல்வி கற்று,B.A.,B.L.,சட்டப்படிப்பை முடித்து,படிப்பின் இடையிலேயே மணமானாலும் இடைநின்று போகாமல் படித்து முடித்தவர்.இன்று இவரைப்பற்றி தெரிந்தவர்கள் அனைவரும் நீதிபதி ஸ்ரீபதியைப் பாராட்டி போற்றிக்கொண்டிருப்பதற்குக் காரணம் அவருடைய வயதா(23),அவருடைய இனமா, அல்லது அவர் வெற்றியடைந்திருக்கும் துறையா…. என்றால்… இவை மூன்றுமே எனலாம் நீங்கள். ஆனால்……..நான் உண்மையிலேயே அதிர்ச்சியில் மூர்ச்சையாயிருந்தேன் இந்தத் தகவலைக் கேட்டபோது.
ஏனெனில்…ஸ்ரீபதிக்கு நீதிபதி தேர்வு வரும் தேதியிலேயேதான் பிரசவ தேதியும் கொடுக்கப்பட்டிருந்தது.தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன் குழந்தையும் பிறந்துவிட்டது. ஆனால் தேர்வைக் கண்டிப்பாக எழுதவேண்டும் என்று தீவிரமாக இருந்தார் இவர். ” குழந்தை பிறந்த இரண்டாவது நாள் பயணிப்பது என்றால் கொஞ்சம் கஷ்டம்தான். டாக்டரின் ஆலோசனைப்படி வேறெப்படி Safeஆக போகமுடியும் என்று கேட்டுவிட்டு முடிவெடுக்குமாறு நம்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பரமுவிடம்மட்டும் கூறியிருந்தேன். கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து,வெறும் காரை, பாதுகாப்பான, சொகுசு காராக மாற்றி ஸ்ரீபதி தேர்வுக்குச் சென்னை சென்றார்.தேர்வு எழுதினார்.இதோ அத்தேர்வில் வெற்றிவாகையும் சூடியிருக்கிறார்.