மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி (86) மறைவு

0
138
கோஹினூர் டுடோரியல் சென்டர் முதலில் தொடங்கிய மனோகர் ஜோஷியின் வாழ்க்கை பயணம் அவரது தீவிர கடின உழைப்பால் பெரும் உயரத்திற்கு அவரை உயர்த்தியது. ஒரு எழ்மைக் குடும்பத்தில் பிறந்து உழைப்பால் உயர்ந்தவர்.
மும்பை மாநகராட்சி கௌன்சிலர் பின்பு 1976 இல் மும்பை மேயர், மாநில சட்டப் பேரவை உறுப்பினர் (MLA), மாநில மேலவை உறுப்பினர் (MLC) எதிர்கட்சித் தலைவராக (1990-91) மகாராஷ்டிர மாநில முதல்வர் (1995-99), மத்திய தொழில் துறை அமைச்சர் (1999-2002) நாடாளுமன்ற அவைத் தலைவர் (2002-04) & மாநிலங்க ளவை உறுப்பினர் என அரசியலில் உயர் நிலைக்குச் சென்ற படாடோபம் எதுவுமற்ற எளிமையான மாமனிதர் மனோகர் ஜோஷி.மறைந்த பால் தாக்கரேயின் மிகுந்த நம்பிக்கைக்குரிய தொண்டராக சிவசேனா வில் பணியாற்றியவர். மனோகர் ஜோஷியின் மறைவுக்கு நம் அஞ்சலிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here