நாகபுரி ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ஸர்ஸங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத்ஜி அவர்கள் பேசுகையில் மனிதர்களிடம் சத்துவ, ரஜஸ், தமஸ், என்ற மூன்று குணங்களும் நிறைந்து இருக்கின்றன. நாம் தூய வழிபாட்டின் காரணமாக நம்மில் உள்ள சத்துவ குணத்தை அதிகப்படுத்த முடியும் . சக்தியை வலுப்படுத்த முடியும். ஸ்ரீ ராமன் ஸத்வ குணத்தின் உறைவிடமாக இருந்திருக்கிறார். தமோ குணத்தை விடுத்து ஸத்வ குணத்தை ஏற்றுக் கொண்டதன் காரணமாக எல்லா நிலைகளிலும் அவர் வெற்றியடைந்திருக்கிறார். எவ்வித போராட்டத்தில் பங்கெடுக்கும் போதும் உயர்ந்த ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம். ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிறந்த ஒழுக்கத்தின் காரணமாக வெற்றி வாகை சூடி இருந்தார். தமோ குணம் நிறைந்திருந்த ராவணனுக்கு தோல்வி ஏற்பட்டது. அசுர சக்திகள் எப்பொழுதுமே அழிந்து போகும்