கர்நாடகவில் இருந்து சென்ற மைசூர் – அயோத்யா தாம் சிறப்பு ரயிலை தீ வைத்துக் கொளுத்துவதாக மிரட்டல்

0
104

கர்நாடத்தில் இருந்து சென்ற மைசூர் – அயோத்யா தாம் சிறப்பு ரயிலை தீ வைத்துக் கொளுத்தி விடுவதாகவும், ராமர் மற்றும் ஹிந்து தர்மத்திற்கு, விரோத மாக வன்முறையைத் தூண்டும் வகையில் கோஷமிட்டு வீண் விவாதம் செய்த 4 இஸ்லாமிய இளைஞர்களால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.இதனால் ஆத்திரமடைந்த ராம பக்தர்கள் ரயில் நிலையத்திலேயே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இரயில்வே காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஷேக் கான் எனும் இளைஞர் கைது செய்யப்பட் டார். தப்பிச் சென்ற மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர். கர்நாடக மாநில விஜயநகர மாவட்டத் திலுள்ள ஹோஸ்பெட் ரயில் நிலையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 1,000 க்கும் அதிகமான இராம பக்தர்கள் அயோத்தி சென்று திரும்பி வரும் போது பிப்ரவரி 22ஆம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here