குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

0
115

தூத்துக்குடியில் சுமார் ரூ.17,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். வ.உ.சி துறைமுகத்தில் ரூ.7055.95 கோடி மதிப்பில் தூத்துக்குடி வெளித் துறைமுக கட்டுமான பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.இந்தியாவின் முதல் உள்நாட்டு பசுமை ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்க கூடிய உள்நாட்டு நீர்வழி கப்பல் போக்குவரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் இராமேஸ்வரம் பாம்பன் கடலில் அமைக்கப்பட்ட தூக்கு பாலத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.குலசேகரப்பட்டினம் இஸ்ரோ விண்வெளி ஏவு தளத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இப்பகுதியில் 2,000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி பூங்கா அமைக்கப்படுகிறது. குலசேகரப்பட்டினம், அமலாபுரம், எள்ளுவிளை, கூடல் நகர், அழகப்பபுரம், உள்ளிட்ட பல கிராமங்களில் 2,233 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here