மேற்கு வங்க சந்தேஷ்காளி பிரச்சனைகளுக்குக் காரணமான திரிணாமுல் காங்கிரஸ் (குண்டர்& ரவுடி) ஷாஜஹான் ஷேக்கை போலீஸார் கைது செய்துள்ளனர். ஷாஜஹான் ஷேக் வீட்டினை சோதனையிடச் சென்ற அமலாத்துறையினர் மீது தாக்குதல் நடத்திவிட்டு மேற்கு வங்க போலீஸ் உதவியுடன் தலைமறைவு நாடகம் நடத்திய 55 நாட்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கத்தா உயர் நீதிமன்றம் சிபிஐ அல்லது அமலாக்கத் துறையினர் கூட இவரைக் கைது செய்யலாம் என்று நேற்று சொன்னதன் விளைவு மேற்கு வங்க காவல் துறையினரே கைது செய்துவிட்டனர். ஏழை எளிய மக்களின் நிலங்களை கைப்பற்றுதல், பெண்களை கட்டாயப் படுத்தி பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுத்துதல், வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக குடியேறும் இஸ்லாமியர்களுக்கு ஆதார், வாக்காளர் அடையாள அட்டை பெற்றுக் கொடுப்பது, தேர்தலில் கள்ள வாக்குகள் போடுதல் போன்ற சமூக விரோத செயல்கள் செய்வதில் தேர்ச்சி பெற்றவன்.