கேரளா, மலப்புறம் மாவட்ட உள்ளட்டு பரவைச் சேர்ந்த சனுல் இஸ்லாம் என்பவரை அங்குள்ள தாலிபான் அரசு கைது செய்துள்ளது. கோராசன் மாகாண இஸ்லாமிய அரசு என்ற பயங்கரவாத அமைப்பு டன் (Islamic State Khorasan Province) (ISKP) தொடர்பு கொண்டவர் என்று சந்தேகப்பட்ட தாலி பான் அரசு சனுல் இஸ்லாமைக் கைது செய்துள்ளது. தெஜிகிஸ்தான் வழியாக ஆஃப்கானிஸ்தான் சென்றுள்ளார். ஆஃப்கானில் பிடிபட்ட இவரிடம் எதற்காக இங்கு வந்துள்ளீர்கள் என்று ஆஃப்கான் அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியவில்லை. ஐ.எஸ்.கே.பி. யுடன் தொடர்பு இருக்க லாம் என்று சந்தேகமடைந்த தாலிபான் அரசு இவரைக் கைது செய்து காந்தஹார் சிறையில் அடைத்து விசாரித்து வருகிறது. ஐ.எஸ்.கே.பி.யினருடன் சேர்ந்து ஜிஹாத் போரில் ஈடுபட 2014 முதல் ஆஃப்கானிஸ் தான் சென்ற பாரத முஸ்லிம் இளைஞர்கள் 11 பேர் இது வரை கொல்லப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களே இதில் அதிகம். சனுல் இஸ்லாம் போன்று மூளைச் சலவை செய்யப்பட்ட எண்ணற்ற இஸ்லாமிய இளைஞர்கள் முன்பின் பழக்கம் இல்லாத நாட்டிற்குச் சென்று அங்குள்ள ஜிகாதி களாலேயே படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். உலகில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவிட வேண்டும் என்ற கானல்நீரை உண்மையென்று கருதி உயிர்விட்டு வருகின்றனர்.