ஏராளமான சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சீன & நேபாள நாட்டைச் சேர்ந்த 3 நபர்களை நோய்டா போலீஸார் கைது செய்துள்ளனர். பிரபலமான சோஷியல் மீடியா ஆப் பயன்படுத்தி வரும் நபர்களே அவர்களின் இலக்காக இருந்துள்ளது.சூ யூமிங் (34) நேபாள் வழியாக விசா ஏதுமின்றி சட்ட விரோதமாக பாரதத் திற்குள் நுழைந்து நோய்டாவில் தங்கி இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரிடமிருந்து 4 பாஸ்போர்ட்கள் & 531 சிம் கார்டுகள் கைப்பற்றப் பட்டுள்ளன. போலியான பாரத அடையாளங்களைக் கொடுத்து சிம் கார்டுகளை ஆக்டிவேட் செய்துள்ளார்.