தாய்லாந்தில் இருந்து  பாரதம் திரும்பியது புத்தரின் நினைவு சின்னங்கள்

0
244

பாரதம் தனது வசம் உள்ள  புத்தரின் சில நினைவு சின்னங்களை  பிப்ரவரி 22 முதல் மார்ச் 18 வரை  தாய்லாந்தில்  காட்சிப்படுத்தியது.முதலில் இந்த நினைவுச் சின்னங்கள்  பாங்காக்கில்   உள்ள  தேசிய அருங்காட்சியத்தில்   வைக்கப்பட்டது  பின்னர் தாய்லாந்து முழுவதும்  ஐந்து வெவ்வேறு இடங்களில்   பார்வைக்கு  வைக்கப்பட்டது இதில்  புத்தர் மற்றும் அவரது இரண்டு முக்கிய சீடர்களான அரஹந்த் சாரிபுத்தர் மற்றும் மஹா மொகல்லானா ஆகியோரின்   நினைவுச் சின்னங்களும் உள்ளன   இதை  தாய்லாந்தில்  4 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் தங்கள் முறைப்படி தரிசனம் செய்தனர்.  இந்நிலையில்  நேற்று முழு அரசு மரியாதையுடன் நினைவுச்சின்னங்கள் பாரதம் திரும்பியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here