ஆஃப்கானிஸ்தானில் கஞ்சாசெடி வளர்க்கவில்லையெனில் ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் மரணமடைவர் – ஸ்பெயின் அதிகாரி

0
250

ஆஃப்கானிஸ்தானில் கஞ்சாசெடி வளர்க்கவில்லையெனில் ஐரோப்பிய நாடுகளில் ஆயிரக்கணக்கில் மக்கள் மரணமடைவர் என ஸ்பெயின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஸ்பானிஷ் செய்தித்தாளான El Pais வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில்,”ஆஃப்கானிஸ்தானில் தாலிபான் அரசு கஞ்சா பயிர் செய்வதை தடை செய்துள்ளதால் உலகின் பல நாடுகளுக்குக் கிடைத்துக் கொண்டிருந்த அபின் மற்றும் ஹெரா யின் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். இதை பயன்படுத்தி வருகிற ஐரோப்பிய நாட்டினர் பலர் மரணமடையக் கூடும்” என்று குறிப்பிட்டுள்ளது. அபின் ஹெராயின் பற்றாக்குறையால் இதைப் பயன்படுத்தி வருவோர் மிக ஆபத்தான வேறு போதைப் பொருட்களை நாடிசெல்வர் என்று எச்சரித்துள்ளது. ஆஃப்கானில் 28000 ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்த கஞ்சா செடி வெறும் 676 ஏக்கராக சுருங்கிவிட்டது என்று அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. இந்த புள்ளி விவரம் எப்படி கிடைத்தது என்பது பற்றிய எவ்வித தகவலும் தரப்படவில்லை. #weird

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here