மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள போஜசாலை வளாகத்தினுள் சரஸ்வதி கோயிலும், அதன் அருகே கமால் மவுலானா மசூதியும் அமைந்துள்ளன. இந்த போஜசாலை கோயில், கமால் மவுலா மசூதியில் தொல்லியல் துறை (ASI) ஆய்வுக்கு மத்தியபிரதேச உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதனிடையே, 2003-ம் ஆண்டுமேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, ஒவ்வொரு செவ்வாயன்றும் சூரியோதயம் தொடங்கி அஸ்தமனம் வரை போஜசாலை வளாக கோயிலில் இந்துக்கள் வழிபாடு நடத்தி வந்தனர். போஜசாலை வளாக மசூதியில் ஒவ்வொரு வெள்ளியன்றும் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்திய தொல்லியல் துறையின் (ASI) குழு கடந்த 22 மார்ச் 2024 அன்று மத்திய பிரதேச மாநிலம் போஜசாலை கோயில், கமால் மசூதியில் ஆய்வு செய்தது. இந்நிலையில் இன்று மீண்டும் இந்திய தொல்லியல் துறையின் (ASI) குழு இங்கு வந்து ஆய்வு பணியை தொடங்கியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் அமைந்துள்ள பழங்கால போஜசாலை வளாகத்தினுள் சரஸ்வதி கோயிலும், அதன் அருகே கமால் மவுலா மசூதியும் எழிலுற அமைந்துள்ளன. கி.பி. 1034-ம்ஆண்டு போஜ் மன்னரால் இக்கோயில் கட்டப்பட்டதாகவும், பிற்காலத்தில் இப்பகுதியை முற்றுகையிட்ட முகலாய அரசர்கள் அங்கு மசூதி கட்டியதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.