பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு ஸ்ரீ நாரதர் விருது வழங்கும் விழா மதுரை மதுரையில் நடைபெற்றது.

0
319
விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென்தமிழகம் சார்பாக சிறந்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு ஸ்ரீ நாரதர் விருது வழங்கும் விழா  மதுரையில் நடைபெற்றது.

உலகின் முதல் பத்திரிக்கையாளரான ஸ்ரீ நாரத மகரிஷியை போற்றும் விதமாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம், அகில பாரத அளவில் சிறந்த பத்திரிக்கையளர்கள் மற்றும் எழுத்தாளர்களை கௌரவித்து விருது வழங்குவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென் தமிழகம் சார்பாக மதுரையில் நடைபெற்ற ஸ்ரீ நாரதர் ஜெயந்தி விழாவில், திரு.வரலொட்டி ரங்கசாமி அவர்கள், (பிரபல எழுத்தாளர்), மற்றும் திரு.வெங்கட சுப்ரமணியன் அவர்கள்
(தலைமை நிருபர்,  தினமலர் நெல்லை). ஆகியோர்களுக்கு ஸ்ரீ நாரதர் விருது – 2024 வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் . மதுரை மாணிக்கம் ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஊடகவியல் துறைத்தலைவர் பேரா.பாபு சஜன் கெவின்,  அவர்கள் தலைமை தாங்கினார்.  தியாக பூமி மாத இதழ் ஆசிரியர்
திரு. கிருஷ்ண முத்துசாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் நிகழ்ச்சியில்  தென்தமிழக ஊடகத்துறை  பொருப்பாளர் ஸ்ரீ மோகன் ஜி மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here