ராகுல் குற்றச்சாட்டை மறுத்த இந்திய ராணுவம்!

0
61
ராணுவப் பணியின்போது வீர மரணமடைந்த அக்னி வீரர் குடும்பத்துக்கு சுமார் 99 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
 
பணியின்போது உயிரிழந்த அக்னி ராணுவ வீரர் அஜய் என்பவரது மறைவுக்கு எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை என அவரது தந்தை பேசுவதைப் போன்ற வீடியோவை ராகுல் காந்தி வெளியிட்டார்.
 
இந்நிலையில் ராகுலின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து இந்திய ராணுவம் எக்ஸ் வலைதள பதிவொன்றை வெளியிட்டுள்ளது. அதில், அவரது குடும்பத்தினருக்கு ஏற்கனவே சுமார் 99 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய தொகை விரைவில் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here