ஆயுத ஏற்றுமதியில் பாரதம் புதிய சாதனை!    

0
157
sniper rifle ரக துப்பாக்கிகளை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை பாரதம் பெற்றிருக்கிறது. sniper rifle ரக துப்பாக்கிகளுடன், பல நாடுகளுக்கு சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெடிமருந்துகளை ஏற்றுமதி செய்யவும் ஒப்பந்தம் செய்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
 
பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் பல துறைகளிலும் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது. குறிப்பாக , பாரதத்தின் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, 2023-24 ஆம் ஆண்டில் சுமார் ரூ.1.27 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது.
 
10 ஆண்டுகளுக்கு முன் வரை ,இராணுவத் தளவாடங்களை பாரதம் இறக்குமதி செய்து வந்தது. இப்போது பாரதம் சிறிய ஆயுதங்கள் முதல் பீரங்கிகள், துப்பாக்கிகள், ஏவுகணைகள் வரை ஏராளமான இராணுவத் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கிறது. மேலும் இராணுவ தளவாடங்களை ஏற்றுமதியும் செய்கிறது.
 
அந்த வகையில், கர்நாடகாவை சேர்ந்த, SSS DEFENCE என்னும் நிறுவனம் .338 Lapua Magnum ஆற்றலுள்ள sniper rifle எனப்படும் துப்பாக்கிகளை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றிருக்கிறது. மேலும் பல நாடுகளுடன் வெடிமருந்துகள் ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி இருக்கின்றன.
 
இராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் தன்னிறைவை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இது பார்க்கப் படுகிறது.
 
பெங்களூரில் உள்ள SSS DEFENCE என்னும் நிறுவனம், பாரதத்தை ஒரு பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக நிலைநிறுத்த, ‘மேக் இன் இந்தியா’ முயற்சியில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
 
பாரதத்தின் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் ஆயுத ஏற்றுமதியில் பாரதம் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப் பட்டதாக தெரிவிக்கும் இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சதீஷ், 1,500 மீட்டர் மற்றும் அதற்கு அப்பாலும் உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கும் sniper rifle ஏற்றுமதி என்பது இந்தியாவின் மிகப் பெரிய சாதனை என்று தெரிவித்திருக்கிறார்.
 
sniper rifle ரக துப்பாக்கிகள், நவீன போரின் முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. துல்லியமாக குறிவைக்கும் திறனால், sniper rifle இராணுவ வீரர்களால் விரும்பப் படுகிறது. பாரத இராணுவத்தின் ஆயுதக் களஞ்சியத்தில் இந்த sniper rifle ரக துப்பாக்கிகள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன
 
சுமார் 30க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த .338 Lapua Magnum sniper rifle யை பயன்படுத்தி வருகிறது. எனவே , இந்தவகை துப்பாக்கிகளின் தேவை அதிகம். இனி இந்த ரக துப்பாக்கிகளின் ஏற்றுமதியில் பாரதம் முன்னணியில் இருக்கும் என்று உறுதியாக கூறப்படுகிறது.
 
ரஷ்யா – உக்ரைன் போர் நடந்து வருவதால், பல நாடுகளுக்கு ஆயுதங்கள் தேவைப் படுகின்றன. அதனால் பாரதத்தின் இராணுவ ஏற்றுமதி வளர்ச்சி அடைந்துள்ளன.
 
SSS DEFENCE உருவாக்கி உள்ள இந்த sniper rifle ரக துப்பாக்கிகள், பாரதத்தின் பாதுகாப்புத் துறைக்கு உதவுவது மட்டுமல்லாமல், ஆயுத ஏற்றுமதிக்கான களத்தையும் உருவாக்கி தந்துள்ளது.
 
மேலும் சர்வதேச இராணுவப் பாதுகாப்புத் துறையில் பாரதம் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here