போர.K.R.பரமசிவம் அவர்களின் நினைவாக 26ஆம் ஆண்டு இலவச பொது மருத்துவ முகாம் துவக்க விழா

0
77

இளைய பாரதம் சேவா அறக்கட்டளை 1996 முதல் தமிழகம் முழுவதிலும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு சேவா பணிகளை செய்து வருகிறது.இளைய பாரதம் சேவா அறக்கட்டளை மற்றும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் இணைந்து 1999ல் இருந்து கடந்த 25 ஆண்டு காலமாக ABVP யின் முன்னாள் மாநில தலைவர் பேரா.k.r. பரமசிவம் அவர்களின் நினைவாக இலவச பொது மருத்துவ முகாம் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இலவச பொது மருத்துவ முகாமின் 26ஆம் ஆண்டு துவக்க விழா இன்றைய தினம் 14.07.2024 ABVP அலுவலகத்தில் நடைபெற்றது,

இந்த நிகழ்ச்சியில் மருத்துவ முகாம் பொறுப்பாளர் திரு. கார்த்திக்பாபு அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
திருமதி. மகாலட்சுமி, திரு.பாலசுப்ரமணியம், மருத்துவர்.ஜெய் பிரவீன், மருத்துவர்.நாகலெட்சுமி, ஆடிட்டர்.சப்தரிஷி ஆகியோர் திருவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
முகாம் பொறுப்பாளர் திரு.கோபிநாத் அவர்கள் 1999ல் இருந்து இலவச மருத்துவ முகாம் கடந்து வந்த பாதைகள் குறித்து விவரித்தார்.
திரு.பாலசுப்பிரமணியம் ( Galaxy Health Care – நிர்வாக இயக்குநர்) அவர்கள் தலைமை உரையாற்றினார்.
டாக்டர்.ஜெய் பிரவீன் ( தேவகி சிறப்பு மருத்துவமனை) அவர்கள் முகாமின் 25 ஆண்டு கால இலவச மருத்துவ சேவையை பாராட்டி மருத்துவ சேவை தொடர வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
திருமதி.நாகலட்சுமி (பேராசிரியர்.K.R. பரமசிவம் அவர்களின் குடும்ப உறுப்பினர்) அவர்கள் வாழ்த்துரை வழங்கினார் அதில் பம்மு என்று அழைக்கப்படும் பேராசிரியர். கே ஆர். பரமசிவம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவருடைய பள்ளி பருவம் முதல் வாழ்வின் இறுதி வரை செய்த சேவை பணிகள் குறித்து எடுத்துரைத்தார். திரு.கோபாலகிருஷ்ணன் (மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பாளர்) அவர்கள் நன்றியுரையாற்றினார்.
26 ஆம் ஆண்டு இலவச பொது மருத்துவ முகாம் துவக்க விழாவில் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர்
இந்த நிகழ்ச்சியினை ஶ்ரீதரன் (ABVP முன்னாள் மாநில அலுவலக செயலாளர்) அவர்கள் தொகுத்து வழங்கினார்.
EBST யின் TRUSTEE திரு.T.N.K. குமரேஸ் அவர்களும், ABVP யின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஶ்ரீ. அருன்பிரசாத், மாநில அமைப்பு செயலாளர் ஶ்ரீ. சின்னா ஶ்ரீராம்,மாநில இணை செயலாளர் ஶ்ரீ.விஜயராகவன், மாநில அலுவலக செயலாளர் ஶ்ரீ. அஜித்பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை EBST மற்றும் ABVP பொறுப்பாளர்கள் இணைந்து செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here