கார்கில் போரின் 25-ஆவது ஆண்டு வெற்றி விழா

0
127
உத்தர பிரதேச மாநிலம் சர்சவா விமானப் படைதளத்தில் கார்கில் போரின் 25-ஆவது ஆண்டு வெற்றி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

கடந்த 1999-ஆம் ஆண்டு லடாக்கின் கார்கில் பகுதியில் இந்தியா, பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது.

நிகழாண்டு கார்கில் போரின் 25-ஆவது ஆண்டு வெற்றி விழா கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக உத்தர பிரதேச மாநிலம் சர்சவா விமானப் படைதளத்தில் விமான சாகசம் நடைபெற்றது.

இதில் எஸ்யு-30 எம்கேஐ, எம்ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. விமான சாகசத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here