“பாரத ராஷ்டிரத்தின் ஆன்மாதான் சனாதன தர்மம்” எனவும், “சனாதன தர்மமின்றி பாரத நாட்டை நம்மால் கற்பனையாக கூட நினைத்து பார்க்க முடியாது” என்றும் தமிழக ஆளுநர் ஆர் .என். ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபுபாத்தின் 150-ஆவது திருவருகை நினைவேந்தல் மற்றும் உலக வைஷ்ணவ மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மண்ணில்தான் பக்தி தோன்றியது” எனவும், சிவன் மற்றும் விஷ்ணு குறித்தான பாடல்கள் மூலமாக நாயன்மார்களும், ஆழ்வார்களும் பக்தியை பரப்பினர் என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக , திராவிடதேசம் என்று அழைக்கப்படுகிற தென் பகுதியில்தான் பக்தி உருவானது என்றார். தொடர்ந்து பேசிய ஆளுநர், ராமானுஜச்சாரியார் போன்ற மகான்கள் மூலம், இங்கிருந்து வடக்குப் பகுதிக்கு பக்தி பரவியதா தெரிவித்தார்.