வளர்ச்சிக்கு எல்லையில்லை. அகவளர்ச்சி ஆக இருக்கட்டும், புற வளர்ச்சியாக இருக்கட்டும். நாம் வாழ்க்கையில் ஒரு இலக்கை அடைகிறோம், உடனே நாம் அத்துடன் நிறுத்துவதில்லை, அடுத்த இலக்கை நோக்கி உழைக்கிறோம்.
அதே போன்று, ஒரு மனிதன் தனது பண்பின் மூலமாக மாமனிதன் ஆக முடியும் அடுத்து தேவ குணங்களை பெற முடியும். இறைவனாக கூட ஆகலாம். இதையும் தாண்டிய நிலை உள்ளது, விஸ்வரூப நிலை. அது எங்கும் வியாபித்துள்ளது. அதற்கு மேலே, நமக்கு தெரியாது.
சங்க கார்யகர்த்தர்களும் தங்கள் இலக்கை அடைந்து விட்டவுடன், திருப்தியடைந்து விடக்கூடாது. நம் அனைவர் மனதிலும் சற்று அதிருப்தி இருக்கட்டும். ஏனெனில் சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளது. இவற்றை தொடர்ந்து செய்ய
வேண்டும்.நமது சேவைப்பணிகளுக்கு என்றுமே முடிவு கிடையாது,
வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செய்ய வேண்டும். அவ்வாறு தொடர்ந்து செய்தால் தான், அந்த பலன் சமுதாயத்திற்கு முழுவதுமாக கிடைக்கும்.
ஜார்கண்டில் ஸ்வயம்சேவகர்கள் மத்தியில் 18.07.2024 அன்று சர்சங்கசாலக் பேசிய சிறப்புரையின் சாராம்சம்