இருவாணிப்பழா ஆற்றின் மீது ராணுவம் அமைத்துள்ள தற்காலிக பாலம் அமைப்பு!

0
93
வயநாடு அருகே இருவாணிப்பழா ஆற்றின் மீது ராணுவம் அமைத்துள்ள தற்காலிக பாலம் திறக்கப்பட்டு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவால், முண்டக்காய் கிராமத்தின் ஒரு பகுதி மண்ணில் புதைந்தது.

மீட்பு பணிகளில், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஈடுபட்டுள்ளன. அங்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீட்பு பணி சவாலாக உள்ளது. இந்நிலையில், மீட்பு பணிகளை துரிதப்படுத்தும் வகையில், இருவாணிப்பழா ஆற்றின் மீது முண்டக்காய் மற்றும் சூரல்மலையை இணைக்கும் புதிய பாலத்தை ராணுவம் அமைத்துள்ளது.

24 டன் எடை கொண்ட வாகனத்தை தாங்கும் திறன் கொண்ட இந்த பாலம், தற்போது போக்குவரத்துக்கு திறக்கப்பட்டு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த புதிய பாலத்தின் கழுகு பார்வை காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here