வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர் பிழைத்த மூதாட்டிக்கும், பேத்திக்கும் பாதுகாப்பாக நின்ற காட்டு யானைகள்!

0
256
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர்பிழைத்த மூதாட்டிக்கும் அவரது பேத்திக்கும் காட்டு யானைகள் பாதுகாப்பாக நின்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள நிலச்சரிவு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அப்பகுதியை சேர்ந்த மூதாட்டியும் அவரது பேத்தியும் நிலச்சரிவில் இருந்து மீண்டு அப்பகுதியில் இருந்த தனியார் எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்தனர்.

அங்கு கனமழை பெய்துக்கொண்டிருக்கும் போது 3 காட்டு யானைகள் அங்கு வந்துள்ளன. யானைகளை கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி கண்ணீர் சிந்தியபடி தங்களை எதுவும் செய்துவிடாதே என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக யானைகள் அவர்களை எதுவும் செய்யாமல் அழுதபடி நின்றுள்ளது. பின்னர் அங்கேயே உறங்கிய இருவரையும் மீட்புப்படையினர் பாதுகாப்பாக மீட்டனர். இது குறித்து மூதாட்டி பேசிய ஆடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here