ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பின் 32ஆம் ஆண்டு நினைவுத் தினம் அனுசரிப்பு!

0
85
சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பின் 32ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

1993ஆம் ஆண்டு சென்னை சேத்துப்பட்டில் உள்ள தமிழக ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்க அலுவலகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாலன், காசிநாதன், ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், குண்டுவெடிப்பு சம்பவத்தின் 32ஆம்ஆண்டு நினைவு தினம் சென்னையில் உள்ள அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆர்எஸ்எஸ் மாநில செயற்குழு உறுப்பினர் சடகோபன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டு உயிரிழந்தோரின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here