பங்களாதேஷில் நடைபெறும் சம்பவம் குறித்து ஆர்.எஸ்.எஸ் சர்கார்யவா தத்தாதிரேய  ஹோசபாலே அறிக்கை

0
77

பங்களாதேஷில் கடந்த சில நாட்களாக ஆட்சி மாற்றத்திற்கான போராட்டத்தின் போது, ஹிந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்து ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது.

ஹிந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல், கொள்ளை, தீவைப்பு  மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் ஹிந்து கோவில்களை தாக்குவதை ஏற்க முடியாது. ஆர்.எஸ்.எஸ். இவற்றை வன்மையாக கண்டிக்கிறது.

பங்களாதேஷில் பொறுப்பேற்றுள்ள இடைக்கால அரசு, இவற்றை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் உயிர், உடமை மற்றும் கௌரவத்தை காப்பாற்ற அரசு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

இந்த இக்கட்டான நேரத்தில், அந்நாட்டில் துன்புறுத்தலுக்கு உள்ளான ஹிந்துக்கள், பௌத்தர்கள் உள்ளிட்ட சமுதாயத்தினருக்கு துணை நிற்க பாரதத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சர்வதேச சமுதாயத்தை கேட்டுக் கொள்கிறோம்.

As a friendly neighbour, the Government of Bharat is trying to play an able role in this situation in Bangladesh. Rashtriya Swayamsevak Sangh urges the Government to make every effort to ensure the safety of Hindus, Buddhists, etc. in Bangladesh.
பங்களாதேஷின் இந்த சூழ்நிலையில், ஒரு நட்புமிக்க அண்டை நாடாக ஆக்கபூர்வ பங்காற்ற பாரத அரசு முயற்சித்து வருகிறது.  அங்குள்ள ஹிந்துக்கள், பௌத்தர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். கேட்டுக் கொள்கிறது.

தத்தாத்ரேய ஹொசபலேபொது செயலாளர் , ஆர்.எஸ்.எஸ்.
ஆகஸ்ட் 9, புதுடெல்லி

(August 9, 2024, Delhi)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here