இந்தியா, இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை நாகை துறைமுகத்திலிருந்து தொடங்கியது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கடல் வழி பன்னாட்டு பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணத்தால் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், முன்பதிவு செய்த 44 பயணிகளை ஏற்றிக்கொண்டு நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைமுகத்திற்கு இன்று கப்பல் புறப்பட்டது.
4 மணி நேர பயணத்திற்கு பிறகு நண்பகல் 2 மணிக்கு காங்கேசன் துறைமுகத்தை கப்பல் அடைகிறது. மீண்டும் மறு மார்க்கமாக நாளை காலை புறப்படும் கப்பல் நாகைக்கு வந்தடைகிறது. கப்பல் சேவை தொடக்க விழாவில் புதுச்சேரி உள்துறை அமைச்சர், நாகை எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.