கேசவ சேவா கேந்திரம் சார்பாக  இலவச மருத்துவ முகாம்!         

0
1755
மதுரை பாரதி இன்ஃபினிட்டி மருத்துவமனை மற்றும் கேசவ சேவா கேந்திரம் இணைந்து இலவச மருத்துவ முகாம் ஆனது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்நிகழ்ச்சியை மதுரை மஹாநகரின் சகசங்கசாலக் மானிய.ஸ்ரீ விஸ்வநாதன் ஜி மற்றும்.புதூர் நகர் சங்கச்சாலக்  மானனீய.ஸ்ரீ.சரவண முத்து ஜி         அவர்கள்  மற்றும் அப்பகுதியில் உள்ள சமுதாயத் தலைவர்கள் மற்றும் பெரியோர்கள் இவர்கள் அனைவரும் இணைந்து   குத்து விளக்கினை ஏற்றி நிகழ்ச்சியினை ஆரம்பித்து வைத்தனர். இந்த மருத்துவ முகாமில் 1.ரத்த பரிசோதனை 2.ரத்த மாதிரி பரிசோதனை 3.இ சி ஜி.     4.உயர் ரத்த அழுத்தம்       போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தேவைப்படும் நோயாளிகளுக்கு மருத்துவ நிபுணர்களால் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன 300க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.    மேலும் மருத்துவ முகாம் மூலம் அப்பகுதியில்  ஒரு புத்துணர்ச்சியம் மறுமலர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. மேலும் மஹாநகரில் உள்ள அனைத்து நகரங்களிலும் இலவச மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here