ஆகஸ்ட் 31 ஆம் தேதி 2024 அன்று சௌராஷ்டிரா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் 9 விவித க்ஷேத்திரங்களில் இருந்து 50 பெண்கள் மற்றும் 25 பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பு முறையே கடவுள் வாழ்த்துடன் விளக்கேற்றி துவங்கப்பட்டது. காலை முதல் பாகத்தில் முதல் தலைப்பாக பாரத பெண்கள் பற்றிய கண்ணோட்டத்தில் பேராசிரியை. சுகந்தா ராமமூர்த்தி அவர்கள் உரையாற்றினார். மகிளா சமன்வயவின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி. கனிமொழி அவர்கள் இரண்டாம் தலைப்பாக மகிளா சமன்வய பற்றி விளக்கவுரையாற்றினார். அதைத்தொடர்ந்து, மகிளா சமன்வயவின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் திருமதி .உமா முருகன் அவர்கள் சமூகத்தில் இருக்கும் கல்வி, பாதுகாப்பு மற்றும் பல துறைகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைவதே மகிளா சமன்வையாவின் நோக்கம் என்பதை விளக்கினார்.
இரண்டாம் பாகத்தில் முதல் தலைப்பாக திருமதி. பானுமதி அவர்கள் “புண்ணிய சுலோக்”அகல்யா பாய் ஹோல்கர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தார்.
அதைத்தொடர்ந்து மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் மகிளா சமன்வயவின் சம்பர்க்க திரு.P. வெங்கட்ராமன் ஜி அவர்கள் பஞ்ச பரிவர்த்தனை பற்றிய குறிப்பு அளித்ததோடு பங்குபெற்ற அனைவரையும் 5 குழுவாக பிரித்து பஞ்ச பரிவர்த்தனையின் ஒவ்வொரு தலைப்பிலும் கலந்துரையாடல் செய்ய பணித்தார். இதன் முடிவாக ஒவ்வொரு குழுவிலும் ஒரு பிரதிநிதி தலைமை ஏற்று தங்கள் குழுவின் சிந்தனைகளை பரிமாறிக் கொண்டனர்.
மதிய உணவு இடைவெளிக்குப்பின் மூன்றாம் பாகத்தில் முதலாவதாக திருமதி. உமா முருகன் அவர்கள் கருத்து பரிமாற்றம் நடத்தி மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றிய சர்ச்சைகளை நடத்தினார். இறுதி நிகழ்வாக மதுரை விபாக் பிரச்சாரக் திரு. மகேஷ் ஜி அவர்கள் ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்கம் துவங்கப்பட்ட நோக்கத்தை விரிவாக எடுத்துரைத்தார். மகிளா சமன்வய இந்த பயிற்சி முகாமை சீராக கொண்டு செல்ல உறுதுணையாக திரு. ஆனந்த் ரகுநாதன் க்ஷேத்ரிய காரிய காரிணி சதஸ்ய உடன் இருந்து வழி நடத்தினார்.
இம்முகாம் மூலம் பண்பாட்டு வகுப்புக்கள் நடத்த வேண்டிய அவசியத்தை பங்கேற்றவர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.
வருங்காலத்தில் மகிளா சமன்வய உடன் இணைந்து செயல் பட அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.