நாம் என்று நம் தர்மத்தை மறந்து, சுயநலவாதிகளாய் ஆனோமோ, அன்று தான் தீண்டாமை நோய் நம்மை தொற்றிக்கொண்டது. உயர்வு தாழ்வு உள்ளே வந்தது. நாம் இந்த மனப்பான்மையை முழுமையாக அழித்தொழிக்க வேண்டும். சங்கத்தின் செயல்பாடுகள் இருக்குமிடத்தில், சங்க சக்தி இருக்குமிடத்தில், குறைந்த பட்சம் – கோவில், நீர் நிலைகள், இடுகாடு ஆகிய இடங்கள் அனைத்து இந்துக்களுக்கும் திறந்திருக்கப் படவேண்டும். இதற்காக மனமாற்றத்தை சமூகத்தில் உருவாக்க நாம் பாடுபட வேண்டும். சமூக நல்லிணக்கத்தின் வாயிலாக ஒரு புதிய வரலாறு படைக்கவேண்டும்.
பூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத்