“புஷ்ப்” என்றால் முன்னேறும் பாரதம், தடுக்க முடியாத பாரதம், ஆன்மிக பாரதம், வளம் மிக்க பாரதம் !

0
7

அமெரிக்காவிற்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றார். இதனை தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் நடந்த சந்திப்பில் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில்,

அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களைப் பாராட்டினார், அவர்களை இந்தியாவின் “பிராண்ட் அம்பாசிடர்கள்” என்று அழைத்தார், மேலும் அவர்களால் அமெரிக்க-இந்திய கூட்டாண்மை தொடர்ந்து செழித்து வருகிறது என்று கூறினார். “தியாகங்களைச் செய்பவர்கள்தான் பலன்களைப் பெறுவார்கள்” என்ற சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், புலம்பெயர்ந்த இந்தியர்கள் எங்கு வாழ்ந்தாலும், அவர்கள் ஒவ்வொரு துறையிலும் சமூக மற்றும் தேசிய வளர்ச்சிக்கு பங்களிக்கிறார்கள் என்று பேசினார்

மேலும் பிரதமர் மோடி தனது உரையில் ‘விக்சித் பாரத்’ அதாவது வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான ‘புஷ்ப்’ என்கிற திட்டத்தையும் வகுத்தார்.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான கூட்டணி வலுவடைந்து வருகிறது. PUSHP (பூ) உங்களுக்கு நினைவிருக்கும். இதனை நான் இப்படி சொல்ல விரும்புகிறேன். P – Progressive Bharat – முன்னேறும் பாரதம், U – Unstoppable Bharat – தடுக்க முடியாத பாரதம், S- Spiritual Bharat – ஆன்மிக பாரதம், H – Humanity First – மனிதநேய முதன்மை, P – prosperousIndia – வளம் மிக்க பாரதம் என இந்த ஐந்தும் வளமான பாரதத்தை உருவாக்கும்.

இந்தியா பேசினால் தற்போது உலகம் முழுவதும் உற்று கவனிக்கும். உலகில் எங்கு பேரிடர் நிகழ்ந்தாழும் இந்தியா தான் முதலில் உதவுகிறது. கொரோனா சமயத்தில் சுமார் 150 நாடுகளுக்கு நாம் தடுப்பூசி மற்றும் மருந்துகளை விநியோகித்தோம்.

இந்தியா அனைத்துத் துறைகளிலும் வேகமாக முன்னேறி வருவதாகவும், மூன்றாவது பதவிக் காலத்தில் மும்மடங்கு பொறுப்புணர்வைக் தாம் கொண்டிருந்ததாகவும் பிரதமர் கூறினார். “நாங்கள் பத்தாவது பெரிய பொருளாதாரமாக இருந்தோம், இப்போது நாங்கள் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கிறோம். கூடிய விரைவில் நாடு மூன்றாவது பெரிய நாடாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியரும் விரும்புகிறார்கள்” என்று பிரதமர் மோடி கூறினார்.
.
இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியையும் அவர் பேசினார். இரண்டே ஆண்டுகளில் நமது விந்தியா அமெரிக்காவின் 5G நெட்வொர்க்கை முந்திவிட்டது என்று கூறினார். மேலும், இந்தியா ஏற்கனவே புதிய 6ஜி நெட்வொர்க்கை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

பிரதமர் மோடி அதோடு நிற்கவில்லை. AI ஐ செயற்கை நுண்ணறிவு பற்றியும் பேசினார். “உலகைப் பொறுத்தவரை, AI என்பது செயற்கை நுண்ணறிவைக் குறிக்கிறது, ஆனால் என்னைப் பொறுத்தவரை, AI என்பது அமெரிக்க-இந்திய உறவை குறிக்கிறது.”என்று பேசினார்.

இந்தியாவின் லட்சியங்களைப் பற்றி பேசிய அவர், 2036 ஒலிம்பிக்கை நடத்துவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் நாடு மேற்கொண்டு வருவதாக கூறினார். “மிக விரைவில், நீங்கள் இந்தியாவிலும் ஒலிம்பிக்கைப் பார்ப்பீர்கள்,” என்று அவர் ‘மோடி, மோடி’ என்ற ஆரவாரங்களுக்கும் கோஷங்களுக்கும் மத்தியில் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here