ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் உள்ள சைனிக் பள்ளியை அவர் திறந்து வைத்தார். 100
இந்நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத்சிங், மாநிலத்தின் தேசபக்தியுள்ள இளைஞர்களுக்கு இந்த பள்ளி ஒரு சிறப்பிடமாக இருக்கும் என்றும், அவர்களுக்கு ஆயுதப் படையில் சேரவும், தேசத்திற்குச் சேவை செய்யவும் அவர்களுக்குத் தேவையான சரியான வழிகாட்டுதல் மற்றும் தேவையான உள்கட்டமைப்புகள் வழங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் மகாராணா பிரதாப், பிருத்விராஜ் சவுகான், மகாராஜ் சூரஜ்மல் மற்றும் சவாய் ஜெய் சிங் போன்ற துணிச்சலான மனிதர்களின் மண் என்று கூறினார். இந்த மாவீரர்கள் இளைய தலைமுறையினருக்கு ராணுவத்தில் சேர ஒரு உத்வேகம் அளிப்பவர்களாக உள்ளனர். இந்த புதிய சைனிக் பள்ளி அவர்கள் தாய்நாட்டிற்கு சேவை செய்ய வழிகாட்டும் என்று தெரிவித்தார்.
இந்த புதிய சைனிக் பள்ளிகள் மூலம், தனியார் மற்றும் பொதுத் துறைகள் ஒன்றிணைந்து, நமது எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த கல்வியை வழங்கும் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார்.