ராணுவத்தின் ஒரு பிரிவான பிராந்திய ராணுவ படை தொடங்கி 75 ஆண்டுகளான நிலையில், அதன் பவள விழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, சியாச்சின் பனிமலையிலிருந்து பிராந்திய ராணுவ வீரர்கள், தரை, வான் மற்றும் கடல் வழியாக 5 ஆயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் பயணித்து அந்தமான் நிகோபார் தீவின் இந்திரா முனையை சென்றடைந்தனர்.
54 நாட்கள் இந்தப் பயணம் நீடித்தது. நாட்டின் தென்கோடி முனையான இந்திரா முனையில், கடலுக்கு அடியில் தேசிய கொடியையும் ராணுவ கொடியையும் ராணுவ வீரர்கள் ஏற்றினர்.