தமிழகத்தில் தொடர்ந்து தாக்கலுக்கு உள்ளாகும் தமிழக கோவில்கள் மற்றும் சுவாமி விக்ரகங்கள்.. கண்டுகொள்ளாத காவல்துறை..
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராம்பாளையம் அருகே உள்ள பழமை வாய்ந்த இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிவன் கோவிலில் மர்ம நபர்களால் சாமி திருமேனிகள் உடைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் திருக்குறுங்குடி சங்கிலி பூதத்தாழ்வார் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டு பூதத்தாழ்வார் திருமேனி சேதம் அடைந்துள்ளது.
இதேபோல் சில நாட்களுக்கு முன்பாக திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பெரியநாயகி அம்மன் கோவிலிலும் தீ விபத்து ஏற்பட்டு, சாமி திருமேனிகள் சேதமடைந்தன.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையிலும் புகழ்பெற்ற முருகன் கோவிலில் சாமி திருமேனிகள் உடைக்கப்பட்டன. தொடர்ந்து தமிழகத்தில் சாமி திருமேனிகள் உடைக்கப்படுவதும், கோவிலுக்குள் தீ விபத்து ஏற்படுவதும் தொடர் கதையாக மாறியுள்ளது. ஆனால் இதுவரை சாமி திருமேனிகளை உடைத்த உண்மையான சமூக விரோதிகளை தமிழக காவல்துறை கைது செய்யவில்லை என்பது அலட்சியத்தின் உச்சம்.
கோவிலை தாக்குபவர்களை மனம் நலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லி வழக்கு பதிவு செய்யாமல் தட்டிக் கழிக்கின்றனர். தொடர்ந்து தமிழகத்தில் கோவில் சிலைகள் உடைக்கப்படுவது ஏதோ திட்டமிட்ட சதி அரங்கேற்றப்படுவதாக பக்தர்கள் சந்தேகிக்கின்றனர்.
தமிழக அரசு உடனடியாக இந்த சதிச்செயலை கண்டறிய காவல்துறைக்கு உத்தரவிட்டு தொடர்ந்து தமிழகத்தில் இந்து கோவில்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்…
Home Breaking News தமிழகத்தில் தொடர்ந்து தாக்கலுக்கு உள்ளாகும் தமிழக கோவில்கள் மற்றும் சுவாமி விக்ரகங்கள்..