1974ஆம் ஆண்டு டெல்லியில் பதிவு செய்யப்பட்ட அகில பாரத க்ராஹக் பஞ்சாயத்து (ABGP) அமைப்பு, நாடு முழுவதும் 850க்கும் மேற்பட்ட கிளைகளுடன் நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பயிற்சியை முன்னெடுத்து வரும் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. 50 ஆண்டு செயல்பாடுகளை பூர்த்தி செய்து, தற்போது 51வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்த அமைப்பு, தனது தொண்டினை துரிதமாக விருத்தி செய்து வருகிறது.
இந்த 51வது ஆண்டு தொடக்க விழா, ABGP தென் தமிழகம் சார்பில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலைக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ABGP அகில பாரத இணை செயலாளர், வழக்கறிஞர் திரு. விவேகானந்தன், ABGP தென் பாரத அமைப்பு செயலாளர் M.N. சுந்தர் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவின் ஒரு பகுதியாக, ABGP அமைப்பு தமிழகத்தில் மேற்கொண்ட சாதனைகள் பற்றிய கண்காட்சி இடம்பெற்றது, இது நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக அமைந்தது.