மதுரை: வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு, மதுரை கிளை சார்பாக 10.12.2024 அன்று வங்கதேச ஹிந்துக்களின் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்த கருத்தரங்கம் மதுரையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மதுரை சின்மயா மிஷன் பூஜனீய சுவாமி ஜிதேஷ் சைதன்ய மகராஜ் அவர்கள் ஆன்மிகமும் சமூக நீதியும் பற்றிய ஆழ்ந்த உரையாற்றினார். மதுரை மஹாநகர் சங்கசாலக் மானனீய மங்களம் முருகன் அவர்கள் வங்கதேசத்தில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களின் மீது கவனம் செலுத்துவது குறித்த சிந்தனைகளை முன்வைத்தார்.
சேத்ர பிரச்சார் ப்ரமுக் ஆதனிய ஸ்ரீராம் அவர்கள் சிறப்புரையாற்றி, இந்த பிரச்சனையின் முக்கியத்துவத்தை தேசிய மற்றும் சர்வதேச அளவில் வலியுறுத்தினார். மதுரை ஜில்லா சங்கசாலக் மானனீய பேராசிரியர் சந்திரன் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துரைகளை பகிர்ந்துகொண்டார்.
இந்த கருத்தரங்கம், வங்கதேசத்தில் உள்ள பீடித்த ஹிந்துக்களின் நிலைமையை சர்வதேசத்தின் முன் கொண்டு சேர்க்கும் முயற்சியாக திகழ்ந்தது.