திருச்சி: வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு சார்பாக 10.12.2024 அன்று வங்கதேச ஹிந்துக்களின் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்த கருத்தரங்கம் திருச்சியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் திருச்சி விபாக் சங்கசாலக் மானனீய சம்பத் அவர்கள், வங்கதேசத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆழமான பார்வையுடன் கருத்துக்களை பகிர்ந்தார். சேத்ர சேவா ப்ரமுக் ரவிக்குமார் மற்றும் திருச்சி நகர் சங்கசாலக் மானனீய ரஜினிகாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்
அகில பாரத சேவா ப்ரமுக் ஆதனிய பராக் அப்யங்கர் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர், வங்கதேச ஹிந்துக்களின் துயரங்களையும், அதனை சர்வதேச அளவில் முன்னிறுத்தும் முயற்சிகளின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இந்த கருத்தரங்கம், பீடிக்கப்பட்ட வங்கதேச ஹிந்துக்களின் உரிமைகளுக்கான நடவடிக்கைகளின் அவசியத்தை நினைவூட்டும் விழிப்புணர்வுப் பந்தமாக அமைந்தது.