மக்கள் அச்சப்பட வேண்டாம்

0
438

பயங்கரவாதிகள் அல்லது அவர்களது கூட்டாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நபர்களின் சொத்துக்கள் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (உபா) கீழ் பறிமுதல் செய்யப்படும் என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை சில நாட்களுக்கு முன் எச்சரித்திருந்தது. அது குறித்த மக்களின் குழப்பத்தை போக்கும் வகையில் மீண்டும் ஒரு அறிவிப்பை ஜம்மு காஷ்மீர் காவல்துறை அறிவித்துள்ளது. அதில், ‘இந்த சட்டம் குறித்து அப்பாவி மக்கள் கவலைப்படத் தேவையில்லை. பயங்கரவாதிகளின் துப்பாக்கி முனையில் அகப்பட்டு அடைக்கலம் கொடுக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது. மாறாக, வீட்டின் உரிமையாளர் வேண்டுமென்றே பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். தானியங்களிலிருந்து பதரை தனியாக பிரிக்கும் திறமையும் அறிவும் எங்களுக்கு உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here