உலகில் பாரதம் முதலிடம்

0
184

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தியோதர் பகுதியில் புதிய பால் பண்ணை வளாகம் மற்றும் பனாஸ் பால் பண்ணையின் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், ‘ பாரதம் இன்று உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக உள்ளது. கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் பாலை நம்பியே இருக்கிறது. இங்கு ஆண்டுக்கு 8.5 கோடி ரூபாய்க்கு பால் உற்பத்தி செய்கிறது. பெரிய பொருளாதார வல்லுநர்கள் உள்பட யாரும் இதில் கவனம் செலுத்தவில்லை. கிராமங்களின் பரவலாக்கப்பட்ட பொருளாதார அமைப்பு இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. பால் துறையின் மிகப்பெரிய பயனாளிகளாக சிறு விவசாயிகள் உள்ளனர். கோதுமை, அரசியின் விற்பனை கூட ரூ. 8.5 லட்சம் கோடிக்கு சமமாக இல்லை. புதிய பால் பண்ணை வளாகம், பனாஸ் டெய்ரியின் உருளைக்கிழங்கு பதப்படுத்தும் ஆலை ஆகியவை உள்ளூர் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கிறது. இது, இப்பகுதியில் கிராமப்புற பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும்’ என தெரிவித்தார். 3 நாட்கள் குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ரூ. 22,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here