மஹாராஷ்டிராவில் சதாரா மாவட்டத்தை சேர்ந்த பிரியங்கா மோஹிதே 30 என்ற பெண் மலையேற்றத்தில் பல சாதனைகளை படைத்து வருகிறார்.இவர் 2013ல் உலகின்மிக உயரமான எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறி சாதனைப் படைத்தார். இதன் உயரம் 8849 மீட்டர் ஆகும். இதேபோல் 2018ல் 8516 மீட்டர் உயரமான லோட்சே மலைச் சிகரத்திலும் 8485 மீட்டர் உயரமான மகாலு மலைச் சிகரத்திலும்; கடந்த ஆண்டு 8091 மீட்டர் உயரமான அன்னபூர்ணா மலைச் சிகரத்திலும் ஏறினார். இந்நிலையில் தற்போது உலகின் மூன்றாவது மிகப்பெரிய மலையான கஞ்சன்ஜங்கா மலைச் சிகரத்தில் ஏறி பிரியங்கா அசத்தி உள்ளார். இதன் வாயிலாக 8000 மீட்டருக்கு மேல் உயரமான ஐந்து மலைச் சிகரங்களில் ஏறிய முதல் இந்திய பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.