அருணாச்சல பிரதேசத்தில் மண் சரிவு ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்

0
526

இடாநகர், மே 16.  இங்குள்ள பஞ்சாபி தாபா அருகே இடைவிடாது பெய்த மழையால் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவினால் அவர்களது வீடு இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்ததாக திங்கள்கிழமை காவல்துறை தெரிவித்துள்ளது.

நிலச்சரிவின் தாக்கத்தால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடிந்து விழுந்த மண் வீட்டினுள் ஒரு பெண் இன்னும் சிக்கியிருப்பதாக தலைநகர் காவல்துறை கண்காணிப்பாளர் (SP) ஜிம்மி சிராம் தெரிவித்தார்.

இடிபாடுகளில் இருந்து இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பெண்ணின் கதி என்ன என்பது இன்னும் தெரியவில்லை, என்றார்.

அவரை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக எஸ்பி மேலும் தெரிவித்தார்.

இறந்தவர்கள் 50 வயதான நாகென் பர்மன் மற்றும் தபஸ் ராய் (15) என அடையாளம் காணப்பட்டுள்ளனர், குசும் ராய் (35) இன்னும் மீட்கப்படவில்லை என்று இட்டாநகர் காவல் நிலைய பொறுப்பதிகாரி பசாங் சிமி தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது, பல மாவட்டங்களில் நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிர்வாகம் இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, நஹர்லகுனில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் பந்தர்தேவாவில் உள்ள நிகும் நியா ஹால் ஆகியவற்றை தற்காலிக நிவாரண முகாம்களாக நியமித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here