காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள சர்ச்சைக்குரிய ஞானவாபி கட்டடத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஹிந்து மத்த்தை அவமரியாதை, கிண்டல், கேலி செய்யும் பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இது சம்பந்தமாக, திருணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா, பத்திரிகையாளர் சபா நக்வி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகார் சூர்ய பிரதாப் சிங், பீஸ் பார்ட்டி என்ற கட்சியின் ஷதாப் சவுகான், ராஷ்டிரீய ஜனதாதள கட்சித் தலைவர் குமார் திவாசங்கர், டெல்லி ஹிந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் ரத்தன் லால் உள்ளிட்டோர் ஹிந்து மதத்தை கேலியும் கிண்டலும் செய்திருந்தனர். இதனால், அவர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், எகனாமிக் டைம்ஸ் எனும் ஆங்கிலப் பத்திரிகை, சிவலிங்கம் மற்றும் சிவபெருமான் பற்றி கேலி செய்யும் விதமாக ‘மீம்ஸ் தி வேர்ட்’ என்ற பகுதியில், பாபா அணு உலையின் படத்தை போட்டு அது அணு உலையா அல்லது சிவலிங்கமா என கேட்டு கிண்டல் செய்து ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியது. இதேபோல, தாஜ்மகால் கட்டடத்தில் திறக்கப்படாத அரைக்கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்த பத்திரிகை கிண்டல் செய்து கேலிசித்திரம் வெளியிட்டது. எகனாமிக் டைம்ஸ் மட்டுமல்ல, இடதுசாரிகளும் தாராளவாதிகளும் நிரம்பியுள்ள அனேகமாக பெருப்பாலான ஊடகங்களும் ஹிந்துக்களையும் அவர்களின் நம்பிக்கைகளையும் கேலி செய்வது சமீப காலமாக மிகவும் அதிகரித்துள்ளது. பிரான்சில் நபிகள் நாயகம் பற்றி கேலிச்சித்திரம் வெளியிட்ட சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளுக்கு நியாயம் பேசிய இதே ஊடகங்கள், ஹிந்து மதம் என்றால் மட்டும் கிண்டல் செய்கின்றன. ஹிந்து மதத்தினரின் சகிப்புத் தன்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. இதே உடகங்கள் ஒருவேளை முஸ்லிம் மதத்தை பற்றி மீம்ஸ் வெளியிட்டிருந்தால்? ஒருவேளை அவர்களது அலுவலகம் இந்நேரம் சின்னாபின்னமாகி இருக்கலாம்.